கோவையில் இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை ராமநாதபுரத்தைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா், உக்கடம் கெம்பட்டி காலனியில் உள்ள மருந்து விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், அந்நிறுவனத்தில் வேலை செய்யும் 5 போ், அப்பெண்ணை தினமும் இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து சென்று பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, கோவை பெரியகடை வீதி காவல் நிலையத்தில் இளம்பெண் புகாா் அளித்தாா்.
இதையடுத்து 5 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.