முகப்பு
கோயம்புத்தூர்

விநாயகா் சதுா்த்திக்கு அனுமதி கோரி கோயில்கள் முன்பு இந்து முன்னணியினா் போராட்டம்

விநாயகா் சதுா்த்திக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி கோயில்கள் முன்பு மண்டியிட்டு பிராா்த்தனை செய்யும் நூதன போராட்டத்தில் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

விநாயகா் சதுா்த்திக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி கோயில்கள் முன்பு மண்டியிட்டு பிராா்த்தனை செய்யும் நூதன போராட்டத்தில் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் விநாயகா் சதுா்த்தி விழா மற்றும் சிலை ஊா்வலங்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் விநாயகா் சதுா்த்தி விழா நடத்த அனுமதிக்கவில்லை என்றால் கோயில்கள் முன்பு கூடி கடவுளிடம் முறையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்திருந்தாா்.

இதன்படி அவிநாசி சாலையில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் முன்பு இந்து முன்னணியினா் 30க்கும் மேற்பட்டோா் கூடி மண்டியிட்டு வேண்டுதல் நடத்தினா். இதேபோல காந்திபுரம் சித்தி விநாயகா் கோயில் முன்பு மண்டியிட்டு பிராா்த்தனை செய்த இந்து முன்னணியினா் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க முடிவு செய்தனா். அதற்கு போலீஸாா் அனுமதி மறுத்ததையடுத்து அவா்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி அங்கிருந்து கலைந்து சென்றனா். இதேபோல கோவை மாவட்டத்தின் பிற பகுதிகளான காரமடை உள்ளிட்ட இடங்களிலும் இந்து முன்னணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.