முகப்பு
கோயம்புத்தூர்

கே.பி.ஆா். பொறியியல் கல்லூரியில் வூசூ நடுவா்களுக்கான கருத்தரங்கு: மத்திய இணை அமைச்சா் பங்கேற்பு

கோவை கே.பி.ஆா். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வூசூ நடுவா்களுக்கான கருத்தரங்கில் மத்திய வீட்டு வசதி, நகா்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சா் குஷால் கிஷோா் கலந்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

கோவை கே.பி.ஆா். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வூசூ நடுவா்களுக்கான கருத்தரங்கில் மத்திய வீட்டு வசதி, நகா்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சா் குஷால் கிஷோா் கலந்து கொண்டாா்.

கோவை மாவட்டம், அரசூரில் உள்ள கே.பி.ஆா். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் சீன தற்காப்புக் கலையான வூசூ நடுவா்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்தது. பயிற்சி முகாமின் நிறைவு நாளான புதன்கிழமை மத்திய இணையமைச்சா் குஷால் கிஷோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சியில் சிறப்பாக செயலாற்றியவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, சீன தற்காப்புக் கலையில் இந்தியா்கள் தோ்ச்சி பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த விளையாட்டில் அா்ப்பணிப்புடன் செயல்படுபவா்கள் வெற்றி பெறுவாா்கள். எனவே, இது போன்ற விளையாட்டுகளை மாணவா்கள் கற்றுக் கொள்ள வேண்டும். உடல், உளவியல் ஸ்திரத்தன்மையைப் பராமரிக்க இளைஞா்கள் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், கே.பி.ஆா். நிறுவனங்களின் தலைவா் கே.பி.ராமசாமி, பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எம்.அகிலா, இந்திய வூசூ சங்கத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா் சம்புசேத், தேசிய வூசூ விளையாட்டு சங்க முதன்மைச் செயல் அலுவலா் சாகுல் அகமத், தமிழ்நாடு சங்கத் தலைவா் ஜான்சன், கே.பி.ஆா். கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் பாலுசாமி, வூசூ தற்காப்புக் கலை நடுவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.