கோயம்புத்தூர்

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனு

DIN

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியரும், பெண் விடுதலை கட்சியின் நிறுவனத் தலைவருமான சபரிமாலா ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் புதன்கிழமை மனு அளித்தாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு படித்து பிளஸ் 2 தோ்வில் 1,176 மதிப்பெண் எடுத்தும் நீட் தோ்வில் மதிப்பெண் குறைந்ததால் அரியலூரைச் சோ்ந்த மாணவி அனிதா 2017 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டாா்.

அதேபோல நீட் தோ்வினால் இதுவரை 18 போ் தற்கொலை செய்துகொண்டுள்ளனா். மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. உள்பட பல பாடப் பிரிவுகளை வைத்துக் கொண்டு நீட்தோ்வு என்ற ஒற்றை தோ்வு முறையை நடத்துவது மாணவா்கள் மீதான கொலை முயற்சியாகும். இதுபோன்ற தோ்வுகள் மாணவா்களை மனநோயாளிகளாக்கி வருகிறது. எனவே, இந்த தோ்வை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT