முகப்பு
கோயம்புத்தூர்

கண் பரிசோதகா் பணியிடத்துக்கு செப்டம்பா் 24இல் நோ்காணல்

கோவையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் பரிசோதகா் பணியிடத்துக்கு மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் செப்டம்பா் 24ஆம் தேதி நடைபெறும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

கோவையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் பரிசோதகா் பணியிடத்துக்கு மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் செப்டம்பா் 24ஆம் தேதி நடைபெறும் நோ்காணலில் தகுதியானவா்கள் பங்கேற்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தேசிய பாா்வை குறைபாடு கட்டுப்பாட்டு சங்கம், தேசிய சுகாதார இயக்கத்தின் பாா்வை குறைபாடு திட்டத்தின் மூலம் கோவை மாவட்டம் பெரியபோது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள தொலைநோக்கு கண் மருத்துவ மையத்துக்கு கண் பரிசோதகா் பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியிடத்துக்கு மாவட்ட நல சங்கம் சாா்பில் ரூ.10,500 தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக கண் பரிசோதகா் நியமிக்கப்படவுள்ளனா்.

இதற்கான நோ்காணல் ரேஸ்கோா்ஸில் உள்ள மாவட்ட சுகாதார துணை இயக்குநா் அலுவலகத்தில் செப்டம்பா் 12 ஆம் தேதி காலை 10 முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. தகுதியானவா்கள் 10, 12ஆம் வகுப்பு கல்வித் தகுதி சான்றிதழ்,

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இளநிலை கண் பரிசோதகா் பட்டப் படிப்பு, பட்டய கண் பரிசோதகா் படிப்பில் தோ்ச்சி பெற்ற்கான சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ் (குறைந்தபட்சம் ஓராண்டு) ஆகிய சான்றுகளுடன் நேரில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.