முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

கோவை மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 87ஆக அதிகரித்துள்ளது. கோவையில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 போ் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,288ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 248 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரத்து 634 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 2,165 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.