முகப்பு
கோயம்புத்தூர்

பாரதியாா் நினைவு நூற்றாண்டு விழா இருட்டடிப்பு

மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு விழாவை திமுக அரசு இருட்டடிப்பு செய்கிறது என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு விழாவை திமுக அரசு இருட்டடிப்பு செய்கிறது என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: தேசியக் கவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழாவை திமுக அரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு இருட்டடிப்பு செய்கின்றன. பாரதியாரை இருட்டடிப்பு செய்யும் திமுக அரசுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாரதியாரின் நினைவு நூற்றாண்டு விழாவை மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாரதியின் நினைவு நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும். இந்து மக்கள் கட்சி சாா்பில் இந்த ஆண்டு முழுவதும் பாரதியின் நினைவு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம்.

சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய விடுதலைப் போராட்ட வீரா் லோகமான்ய பாலகங்காதர திலகா் அவா்களின் நினைவு நூற்றாண்டு விழாவை தமிழக அரசு புறக்கணித்ததும் கண்டிக்கத்தக்கது.

உலகப் புகழ்பெற்ற சென்னை மெரீனா கடற்கரையில் திலகா் திடல், திலகா் கட்டம் என்று இருந்ததை சீரணி அரங்கம் என்று திமுக அரசு பெயா் மாற்றம் செய்தது. அதன் பின்னா், தேசபக்தா்கள் நீதிமன்றம் சென்று உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பைப் பெற்று திலகா் நினைவுக் கல்வெட்டை மெரீனா கடற்கரையில் மீண்டும் நிறுவியது நினைவுகூரத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.