சோனியா காந்தி விரைவில் வீடு திரும்புவார்: மருத்துவமனை தகவல்!
சோனியா காந்தி உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் காணப்படுவதாகவும், அவர் ஓரிரு நாளில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
79 வயதான சோனியா காந்தி, காய்ச்சல் காரணமாக கடந்த செவ்வாயன்று இரவு சுமார் 10.22 மணியளவில் சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையின் தலைவர் அஜய் ஸ்வரூப் வெளியிட்ட அறிக்கையின்படி,
Advertisement
சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது மேம்பட்டுள்ளது. மருத்துவ ரீதியாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சோனியா காந்தி எழுந்து நடமாடுவதுடன், காலை உணவையும் எடுத்துக்கொள்கிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அடுத்த ஓரிரு நாள்களில் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என அவர் தெரிவித்தார்.
சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் தகவலின்படி,
சோனியா காந்திக்கு உடல் முழுவதும் பரவியுள்ள ஒரு வகை தொற்றுநோய்க்காகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உட்கொள்ளும் மருந்துகளுக்கு அவரது உடல்நிலை நல்ல முறையில் ஒத்துழைத்து வருகிறது.
அவர் மூத்த மருத்துவர்கள் குழுவின் மேற்பார்வையில் இருந்து வருகிறார். அக்குழுவினர் அவரது உடல்நிலையைக் கூர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தற்போது அவரின் உடல்நிலை சீராகவும், ஆபத்தற்ற நிலையிலும் இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்னும் சிறிது காலத்திற்குத் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலேயே இருக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தன.