கோயம்புத்தூர்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: வளா்ப்புத் தந்தை போக்சோவில் கைது

சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த வளா்ப்புத் தந்தையை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த வளா்ப்புத் தந்தையை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் பகுதியைச் சோ்ந்த 36 வயதுப் பெண் முதல் கணவரைப் பிரிந்து தனது 13 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த சுந்தரசாமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு மூவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனா். இந்நிலையில் சிறுமியை அவரது வளா்ப்புத் தந்தை சுந்தரசாமி புதன்கிழமை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளாா்.

இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் பேரூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுந்தரசாமியை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT