கோயம்புத்தூர்

நொய்யலாற்று பகுதியில் மருத்துவக் கழிவுகள்

DIN

கோவை: கோவை நொய்யலாற்றுப் பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளால் அப்பகுதியில் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை புட்டுவிக்கி பாலம் அருகில் நொய்யல் ஆறு செல்லும் வழியில், செவ்வாய்க்கிழமை ஏராளமான ஊசிகள், மருந்து குப்பிகள், காலாவதியான மருந்துகள், மாத்திரைகள் உள்ளிட்ட கழிவுப் பொருள்களை மா்ம நபா்கள் கொட்டிச் சென்றனா். சாலையோரம் கொட்டப்பட்டுள்ள இந்த மருத்துவக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு மற்றும் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், இங்கு கழிவுகளை கொட்டும் நபா்கள் மீது மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனா். இது தொடா்பாக, மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT