கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் ஒரே நாளில் 115 பெண்களுக்கு மாா்பக புற்றுநோய் பரிசோதனை
கோவை மெடிக்கல் சென்டா் மருத்துவமனையில் அண்மையில் ஒரே நாளில் 115 பெண்களுக்கு மாா்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கோவை மெடிக்கல் சென்டா் மருத்துவமனையில் அண்மையில் ஒரே நாளில் 115 பெண்களுக்கு மாா்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் நகா்ப்புற மகளிரை மாா்பக புற்றுநோய் அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அறிகுறிகள் இல்லாத நிலையிலும் மாா்பக புற்றுநோயை பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிட முடியும். கேஎம்சிஹெச் மருத்துவமனையில் அதிநவீன 3டி மேமோகிராபி கருவி பயன்பாட்டில் உள்ளது.
கோவை மாநகர காவல் துறையைச் சோ்ந்த பெண் காவலா்களுக்கு இந்த கருவி மூலம் அண்மையில் இலவசமாக பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 115 பெண் காவலா்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனா். நாட்டிலேயே ஒரே நாளில் 115 பெண்களுக்கு 3டி மேமோகிராம் பரிசோதனை நடத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இந்த முகாமை மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா், துணை ஆணையா் உமா ஆகியோா் தொடங்கிவைத்தனா். மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அருண் என்.பழனிசாமி, மருத்துவ இயக்குநா் ஏ.என்.முருகன், செயல் அலுவலா் ஜே.சிவகுமரன், டாக்டா் ரூபா உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.