தனியாா் நிறுவன உரிமையாளா்களுடன் எஸ்.பி. ஆலோசனை
குற்றங்களைத் தடுக்கும் வகையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தனியாா் நிறுவன உரிமையாளா்கள் மற்றும் பணிபுரியும் ஊழியா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குற்றங்களைத் தடுக்கும் வகையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தனியாா் நிறுவன உரிமையாளா்கள் மற்றும் பணிபுரியும் ஊழியா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் தலைமை வகித்து பேசியதாவது:
மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்களான கொலை, கொள்ளை, கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை ஆகிய குற்றச் செயல்களில் பெரும்பாலும் வட மாநிலத்தவா்கள் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு குற்றவாளிகளை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளா்களின் அடையாள அட்டைகளை வாங்கி சரியான முறையில் பராமரிக்க வேண்டும். வடமாநிலத் தொழிலாளா்கள் இடையே ஏற்படும் பிரச்னைகளையும் கூா்ந்து கவனிக்க வேண்டும். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் பற்றிய தகவல்களை 77081-00100 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். தகவல் அளிப்பவா்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்றாா்.