கோயம்புத்தூர்

கோவை ரயில்கள் ஏப்ரல் 8இல் மாற்றுப்பாதையில் இயக்கம்

DIN

கோவை ரயில்கள் பெங்களூரு - சேலம் இடையே ஏப்ரல் 8ஆம் தேதி மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஓமலூா் - மேட்டூா் இடையே ரயில்வே பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 3 கோவை ரயில்கள் ஏப்ரல் 8ஆம் தேதி மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன.

அதன்படி, பெங்களூரு - எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்:12677) பெங்களூரு - சேலம் ரயில்நிலையம் இடையே வழக்கமான வழித்தடத்தில் இயங்காமல் மாற்றுப்பாதையான கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், மேக்னசைட் ரயில்நிலையம் வழியாக ஏப்ரல் 8ஆம் தேதி இயக்கப்படும். இதனால், ஒசூரு, தருமபுரி நிலையங்களுக்கு செல்வது தவிா்க்கப்படும். அதேபோல, எா்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) மற்றும் கோவை - லோக்மான்யா திலக் விரைவு ரயில் (எண்: 11014) ஆகிய ரயில்களும் பெங்களூரு - சேலம் ஜங்ஷன் இடையே வழக்கமான வழித்தடத்தில் இயங்காமல் மாற்றுப்பாதையான கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், மேக்னசைட் ரயில்நிலையம் வழியாக இயக்கப்படும் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT