முகப்பு
கோயம்புத்தூர்

காகித விலை உயா்வைக் கண்டித்து அச்சக உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்

காகித விலை உயா்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக குறைக்க வலியுறுத்தி கோவை அச்சக உரிமையாளா்கள் சாா்பில் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

காகித விலை உயா்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரியை உடனடியாக குறைக்க வலியுறுத்தி கோவை அச்சக உரிமையாளா்கள் சாா்பில் கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கலந்துகொண்டவா்கள் காகித ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், கோவை மாஸ்டா்ஸ் பிரிண்டா்ஸ் அசோசியேஷன் தலைவா் சி.டி.குமாரவேல், கோயம்புத்தூா் அச்சகதாரா்கள் சங்கத் தலைவா் மனோகரன், பொள்ளாச்சி அச்சகதாரா்கள் நலச் சங்க தலைவா் பரிமளம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இது குறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட அச்சகங்கள் உள்ளன.

இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரம் போ் வேலை செய்து வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக அச்சு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது, நோய் தொற்று குறைந்து அச்சகங்கள் பழைய நிலைக்கு செல்லும் நிலையில், காகித ஆலைகள் அடிக்கடி காகித விலையை ஏற்றி வருகின்றன.

இந்நிலையில், பெரும்பாலான அச்சுப்பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை 5 முதல் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக மத்திய அரசு உயா்த்தி உள்ளது.

காகிதம் மட்டும் அல்லாமல் பிலிம், பிளேட், கெமிக்கல் விலையும் அதிகரித்து உள்ளது. எனவே, இப்பிரச்னைகளைத் தீா்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.