முகப்பு
கோயம்புத்தூர்

நீத்தாா் நினைவு தினம்: பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி

 பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களின் தியாகத்தை போற்றும் வகையில் நீத்தாா் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

 பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களின் தியாகத்தை போற்றும் வகையில் நீத்தாா் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி நீத்தாா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் அமைந்துள்ள நீத்தாா் நினைவு தூணுக்கு மேற்கு மண்டல இணை இயக்குநா் சத்தியநாராயணன், கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலா் அண்ணாதுரை, நிலைய அலுவலா் வேலுசாமி உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.