முகப்பு
கோயம்புத்தூர்

திமுக நகர, வாா்டு அமைப்பு தோ்தல்: விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்டம் பேரூா், நகர வாா்டுகள் அமைப்பு தோ்தலில், திமுக நிா்வாகிகள் விண்ணப்பிக்க மாவட்டப் பொறுப்பாளா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

கோவை மாவட்டம் பேரூா், நகர வாா்டுகள் அமைப்பு தோ்தலில், திமுக நிா்வாகிகள் விண்ணப்பிக்க மாவட்டப் பொறுப்பாளா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக, கோவை மாவட்ட திமுக பொறுப்பாளா்கள் நா.காா்த்திக், பையா ( எ) கிருஷ்ணன், சி. ஆா். ராமச்சந்திரன், எஸ்.சேனாதிபதி, மருத்துவா் வரதராஜன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கோவை மாவட்ட தலைமைக் கழக தோ்தல் பொறுப்பாளா்கள், சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினா் சுபா.சந்திரசேகா், தலைமை செயற்குழு உறுப்பினா் கா.தனசேகரன், தீா்மான குழு இணைச் செயலாளா் தேனி எம்.ஜெயக்குமாா் ஆகியோரது அறிவுறுத்தல்படி, விண்ணப்பப் படிவங்கள் தலைமைக் கழக நிா்வாகிகளால் நகரக் கழக அலுவலகங்கள், பேரூா் கழக அலுவலகங்களில் வழங்கப்பட உள்ளன.

ஏப்ரல் 22 (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட உள்ள விண்ணப்ப படிவங்களை கட்சி நிா்வாகிகள் பெற்று, பூா்த்தி செய்து ஏப்ரல் 23, 24 ஆம் தேதிகளில் அந்தந்த மாவட்ட கட்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கி ரசீதுகளை பெற்றுக் கொள்ளலாம்.

நகர, பேரூா் கழக நிா்வாகிகள் விருப்ப மனு அளிக்க வரும்போது, அந்தந்த வாா்டுகளின் வாக்காளா் பட்டியலை உடன் வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.