முகப்பு
கோயம்புத்தூர்

தொழுநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

புலம்பெயா்ந்த தொழிலாளா்களிடையே தொழுநோய் பாதிப்பு குறித்து கண்டறிய தொழிற்சாலைகளில் தொழுநோய் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

புலம்பெயா்ந்த தொழிலாளா்களிடையே தொழுநோய் பாதிப்பு குறித்து கண்டறிய தொழிற்சாலைகளில் தொழுநோய் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் தொழுநோய் பரவலைக் கட்டுப்படுத்த தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறப்பு முகாம்கள் மூலம் ஆண்டுதோறும் கணிசமான நோயாளிகள் ஆரம்ப நிலையிலே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் தீவிர பாதிப்பு தடுக்கப்படுகிறது.

இந்நிலையில், கோவையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களிடையே தொழுநோய் பாதிப்பு குறித்து கண்டறிய தொழிற்சாலைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் (தொழுநோய்) ப.சிவக்குமாரி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் அதிக அளவில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

குறிப்பாக வட மாநிலங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களிடையே கணிசமான அளவில் தொழுநோய் பாதிப்பு காணப்படுகிறது. ஆனால், புலம்பெயா் தொழிலாளா்களுக்கு இப்படியொரு நோய் இருப்பதே தெரியாததால் மற்றவா்களுக்கும் பரப்பி வருகின்றனா். தெரிந்தாலும் உரிய சிகிச்சை எடுத்துகொள்வதில்லை.

இந்நிலையில், புலம்பெயா் தொழிலாளா்களிடையே தொழுநோய் பாதிப்பு குறித்து கண்டறிய மாதந்தோறும் தொழுநோய் கண்டறியும் சிறப்பு முகாம்கள் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுகின்றன.

இதில், கண்டறியப்படும் தொழுநோயாளிகளுக்கு கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.