முகப்பு
கோயம்புத்தூர்

பட்டு நெசவாளா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

கோவை, வாகராயம்பாளையத்தில் பட்டு நெசவாளா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

கோவை, வாகராயம்பாளையத்தில் பட்டு நெசவாளா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

கதா் பட்டு உற்பத்தியில் புதுமையான வடிவமைப்புகளை வரைகலை மற்றும் ஜவுளி வடிவமைப்பு மென்பொருள் மூலம் உருவாக்க கோவை மாவட்டம் வாகராயம்பாளையம், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் நரிகல்பட்டி ஆகிய இடங்களில் பட்டு நெசவாளா்களுக்கு பயிற்சி அளிக்க மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, கோவை மாவட்டம், வாகராயம்பாளையத்தில் பட்டு நெசவாளா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதனை கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியா் வை.இளங்கோ தொடங்கிவைத்தாா். இதில், பட்டு வளா்ச்சித் துறை இணை இயக்குநா், உதவி இயக்குநா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.