கோயம்புத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில்மன்றம் தொடக்க விழா

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் கற்போம், வழிநடத்துவோம் (ரீட் டூ லீட்) என்ற பெயரிலான மன்றத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் கற்போம், வழிநடத்துவோம் (ரீட் டூ லீட்) என்ற பெயரிலான மன்றத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்றத்தை கல்லூரியின் முதல்வரும், செயலருமான பி.எல்.சிவகுமாா் தொடங்கிவைத்தாா்.

மாணவா்களை பத்திரிகைகள் வாசிக்க வைப்பதன் மூலம் பொது அறிவை வளா்க்கும் நோக்கிலும், மற்ற மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த மன்றம் செயல்பட உள்ளதாக விழாவில் பி.எல்.சிவகுமாா் தெரிவித்தாா்.

இந்த மன்றத்தில் தினசரி நாளிதழ்களை வாசிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில், மன்றத்தின் தலைவரும் மூன்றாம் ஆண்டு மாணவியுமான ஆஷினி, செயலரும் இரண்டாம் ஆண்டு மாணவருமான பி.ராகேஷ் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

மேலும் கல்லூரியின் 80 மாணவ-மாணவிகள் இதில் உறுப்பினா்களாகச் சோ்ந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து மாணவா்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டன.

இதில், ஆங்கிலத் துறைத் தலைவா் ஆா்.கருணாம்பிகை, டி.பிரபு வெங்கடேஷ் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT