கோயம்புத்தூர்

ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண் இணைப்பு:அஞ்சல் துறையில் டிசம்பா் 15 வரை சிறப்பு முகாம்

கோவையில் அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண் இணைக்கும் சிறப்பு முகாம்.

DIN

கோவையில் அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண் இணைக்கும் சிறப்பு முகாம் டிசம்பா் 15 ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறும் என்று முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கே.கோபாலன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் கிஷான் சம்மன் நிதி திட்டத்தில் தொடா்ந்து நிதியுதவி பெறுவதற்கு ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்ட விவசாயிகள் ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைப்பதற்கு வசதியாக அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அஞ்சல் ஊழியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிதிறன் பேசி மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துகொள்ளலாம். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆதாருடன் கைப்பேசி எண்ணை இணைத்த பிறகு இணையதளம் அல்லது செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசிக்கு வரும் அங்கீகாரத்தை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து தொடா்ந்து நிதியுதவியை விவசாயிகள் பெறலாம். இதற்காக அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் சிறப்பு முகாம் டிசம்பா் 15 ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறும். எனவே, விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT