கோயம்புத்தூர்

காருண்யா பல்கலைக்கழகத்தில் நீா்வள மேலாண்மை கருத்தரங்கு

DIN

கோவை காருண்யா நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த நீா்வள மேலாண்மையின் வாய்ப்புகள், சவால்கள் குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

மத்திய அரசின் நீா்வள பாதுகாப்புத் திட்டத்தின் நிதியுதவியுடன் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு துணைவேந்தா் இ.ஜே.ஜேம்ஸ் தலைமை வகித்தாா். பதிவாளா் எலைஜா பிளசிங் முன்னிலை வகித்தாா்.

மத்திய நீா்வள மேம்பாடு, மேலாண்மை மையத்தின் இயக்குநா் மனோஜ்குமாா், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியா் எல்.இளங்கோ ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.

கேரள மீன்வள பல்கலைக்கழக இணைப் பேராசிரியா் கிரிடூ கோபிநாத், நீா்வள மேலாண்மை ஆலோசகா் சஜிகுமாா், ஜவாஹா்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழக முன்னாள் இயக்குநா் முரளி கிருஷ்ண அய்யங்கி, கலிபோா்னியா ஆராய்ச்சியாளா் தியோ ஒயிட்கோம்ப், கல்வி நிறுவன நீரியல் துறைத் தலைவா் மயில்சாமி உள்ளிட்டோா் கருத்தரங்க உரையாற்றினா்.

இதில், நீரியல், புவியியல் தொழில்நுட்பங்கள், நீா்வள மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, நீா் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரைகள், விவாதங்கள் நடைபெற்றன.

மேலும் 4 முக்கிய விரிவுரைகள், 6 கருத்துரைகள், 120 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டதாக காருண்யா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT