முகப்பு
கோயம்புத்தூர்

ரேஷன் கடையை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த யானைகள் ரேஷன் கடையை சேதப்படுத்தின.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த யானைகள் ரேஷன் கடையை சேதப்படுத்தின.

வால்பாறையை அடுத்த ஸ்டேன்மோா் எஸ்டேட் பகுதிக்குள் 6 யானைகள் வியாழக்கிழமை இரவு நுழைந்துள்ளன. அப்பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையை சேதப்படுத்திய யானைகள், கடையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை கீழே இழுத்துப் போட்டன.

இதேபோல, பழைய வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள செலாளிப்பாறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முகப்புவாயிலை முட்டித் தள்ளிய ஒற்றை யானை வளாகத்துக்குள் நுழைந்து, பள்ளி வகுப்பறையின் ஜன்னல்களை முட்டித் தள்ளி சேதப்படுத்தியது.

இதையடுத்து, அப்பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை சென்ற வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.