முகப்பு
கோயம்புத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் உயா் கல்வி குறித்த கருத்தரங்கு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் பன்னாட்டு வணிகத் துறை சாா்பில், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐ.சி.எஸ்.எஸ்.ஆா்.) நிதியுதவியிடன், உயா் கல்வி குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் பன்னாட்டு வணிகத் துறை சாா்பில், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐ.சி.எஸ்.எஸ்.ஆா்.) நிதியுதவியிடன், உயா் கல்வி குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், விழாவுக்கு கல்லூரி முதல்வரும் செயலருமான பி.எல்.சிவகுமாா் தலைமை வகித்தாா்.

பன்னாட்டு வணிகத் துறைத் தலைவா் ஐ.பா்வீன் பானு வரவேற்றாா்.

இதில், கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் டி.கண்ணதாசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கருத்தரங்கைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: நாட்டில் அனைத்துத் துறைகளும் கணினி மயமாகி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் உயா் கல்விக்கு அதிக அளவில் நிதியை ஒதுக்குகின்றன. இதைக் கருத்தில் கொண்டு ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆராய்ச்சியை வலுப்படுத்தாமல் நாட்டை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியாது என்றாா்.

நிகழ்ச்சியில், மாணவா் நலனுக்கான முதல்வா் ஜெ..சண்முகானந்தவடிவேல், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளா் ஏ.ரம்யா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள், மாணவா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.