6500mAh பேட்டரியுடன் வெளியான விவோ ஒய் 11, விவோ ஒய் 21
விவோ நிறுவனத்தில் 2 புதிய ஸ்மார்ட்போன்கள் இன்று (மார்ச் 25) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து...
விவோ நிறுவனத்தில் 2 புதிய ஸ்மார்ட்போன்கள் இன்று (மார்ச் 25) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பயனர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவோ ஒய் 11 மற்றும் விவோ ஒய் 21 என இரு ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
6500mAh பேட்டரி திறனுடன், திரை சுமூகமாக இயங்குவதற்காக 120Hz திறனுடன் இந்த இரு ஸ்மார்ட்போன்களும் அறிமுகமாகியுள்ளன.
Advertisement
Advertisement
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவோ ஒய் 11, விவோ ஒய் 21 ஆகிய இரு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ ஒய் 11, விவோ ஒய் 21 - சிறப்பம்சங்கள்!
விவோ ஒய் 11, விவோ ஒய் 21 என்ற இரு ஸ்மார்ட்போன்களும் 6500mAh என்ற அதீத பேட்டரி திறனுடன் வெளியாகிறது.
இதில், சார்ஜிங் வேகம் மட்டும் மாறுபடுகிறது. விவோ ஒய் 21 44W சார்ஜ் ஆகும் திறனும், விவோ ஒய் 11 15W சார்ஜ் ஆகும் திறனும் கொடுக்கப்பட்டுள்ளது.
விவோ ஒய் 21 ஸ்மார்ட்போன் 50MP கேமரா கொண்டுள்ளது. விவோ ஒய் 11 ஸ்மார்ட்போன் 13MP கேமரா கொண்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் முன்பக்கம் 5MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளன.
இரு ஸ்மார்ட்போன்களும் 6.74 அங்குல எச்.டி. திரை கொண்டுள்ளன.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் உடையன.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 1200 nits திறன் கொண்டுள்ளன.
மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் புராசஸர் கொடுக்கப்பட்டுள்ளன.
விவோ ஒய் 21 ஸ்மார்ட்போன், 8GB உள்நினைவகம் (RAM) 128GB நினைவகம் உடையது.
விவோ ஒய் 11 ஸ்மார்ட்போன், 4GB உள்நினைவகம் 128GB நினைவகம் உடையது.
Vivo Y11 5G, Y21 5G launched in India with 6500mAh battery
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.