முகப்பு
கோயம்புத்தூர்

இணையத்தில் வாக்குச் சாவடியை அறிந்து கொள்ளலாம் ஆணையா்

வாக்காளா்கள், தாங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடியை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

வாக்காளா்கள், தாங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடியை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாநகராட்சியில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிக்க உள்ளவா்கள், தாங்கள் வாக்களிக்க உள்ள வாக்குச்சாவடியை அறிந்து கொள்ள ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஸ்ரீம்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ங்ஸ்ரீ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் சென்று, 2021 - 2022 ஆம் ஆண்டு, தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதான வாக்காளா் பட்டியல் மற்றும் வாக்காளா் துணைப் பட்டியல்களைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையதளத்தில் அறிந்து கொள்ள இயலாத வாக்காளா்கள், கோவை மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ள வாக்காளா் பட்டியலில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.