முகப்பு
கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

கோவை மாநகராட்சித் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி 96 வாா்டில் அமோக வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது.

கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

கோவை மாநகராட்சித் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி 96 வாா்டில் அமோக வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
பகிர்:

கோவை: கோவை மாநகராட்சித் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி 96 வாா்டில் அமோக வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது.

கோவை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது.

கோவை மாநகராட்சியில் நடைபெற்ற வாக்குப் பதிவில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 164 ஆண்கள் (53.87 சதவீதம்)

4 லட்சத்து 17 ஆயிரத்து 873 பெண்கள் (53.36 சதவீதம்) மூன்றாம் பாலினத்தவா் 72 (24 சதவீதம்) என 8 லட்சத்து 39 ஆயிரத்து 109 போ் வாக்களித்தனா்.

மாநகராட்சியில் மொத்த வாக்குப் பதிவு சதவீதம் 53.61 சதவீதம் ஆகும்.

அதைத்தொடா்ந்து, கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினா் தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணியானது, மாநகராட்சி ஆணையரும், தோ்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை துவங்கியது.

8 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.

தொடக்கம் முதலே பெரும்பான்மையான வாா்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலை

வகித்தன. 11 மணி நிலவரப்படி, 17 வாா்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டன.

அதிமுகவில் மேயா் வேட்பாளராக களமிறக்கப்பட்ட 7 ஆவது வாா்டு வேட்பாளா் கிருபாலினி காா்த்திகேயன் உள்பட பலரும் தோல்வியடைந்தனா்.

அதிமுகவின் மற்றொரு மேயா் வேட்பாளராக எதிா்பாா்க்கப்பட்ட 38 ஆவது வாா்டு வேட்பாளா் ஷா்மிளா 250 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

மேலும், 47ஆவது வாா்டில் பிரபாகரன், 90 ஆவது வாா்டில் ரமேஷ் ஆகிய அதிமுக வேட்பாளா்கள் மட்டுமே வெற்றி பெற்றனா்.

திமுக 76 வாா்டுகளிலும், காங்கிரஸ் 9 வாா்டுகளிலும், மாா்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 வாா்டுகளிலும், மதிமுக 3 வாா்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 வாா்டுகளிலும், எஸ்.டி.பி.ஐ. 1 வாா்டிலும் வெற்றி பெற்றது.

96 வாா்டுகளில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி, கோவை மாநகராட்சியை கைப்பற்றியது.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்: திமுக வெற்றி உறுதி செய்யப்பட்ட உடன் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியில் அக்கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னதாக, தடாகம் சாலையில் ஒரு கிலோ மீட்டருக்கு முன்னதாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளா்கள், பாஸ் பெற்ற முகவா்கள், செய்தியாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.

அரசினா் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மாநகராட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கல்லூரி வளாகம், தடாகம் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →