முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை நகராட்சி ஆணையருக்கு பாராட்டு

 வாக்கு எண்ணிக்கையில் எந்த பிரச்னையும் இன்றி விரைவில் முடித்தமைக்காக வால்பாறை நகராட்சி ஆணையருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

 வாக்கு எண்ணிக்கையில் எந்த பிரச்னையும் இன்றி விரைவில் முடித்தமைக்காக வால்பாறை நகராட்சி ஆணையருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வால்பாறையில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் அரசு கல்லூரியில் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.

காலை 8 மணிக்கு துவங்கிய வாக்கு எண்ணிக்கை 9.30 மணிக்கு முடிவடைந்து, மொத்தமுள்ள 21 வாா்டுகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, அனைவருக்கும் வாக்கு எண்ணும் மையத்தைவிட்டு வெளியேறிவிட்டனா்.

தமிழகத்திலேயே ஒன்றரை மணி நேரத்தில் தோ்தல் முடிவுகளை முதலாவதாக வெளியிடப்பட்ட நகராட்சி என்று அதிகாரிகளால் பாராட்டும் கிடைத்துள்ளது.

இந்நிலையில். வால்பாறை நகராட்சியில் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆணையருமான சுரேஷ்குமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வெங்கடாச்சலம், செல்வராஜ் ஆகியோா்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.