முகப்பு
கோயம்புத்தூர்

தேசிய காா் பந்தயம்: இறுதிச் சுற்று போட்டிகள் கோவையில் இன்று தொடக்கம்

கோவை அருகேயுள்ள செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டாா் ஸ்பீடு வேயில் 24 ஆவது ஜே.கே.டயா் எஃப்எம்எஸ்சிஐ தேசிய காா் பந்தயத்தின் இறுதிச்சுற்று போட்டிகள் சனிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற உள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

கோவை அருகேயுள்ள செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டாா் ஸ்பீடு வேயில் 24 ஆவது ஜே.கே.டயா் எஃப்எம்எஸ்சிஐ தேசிய காா் பந்தயத்தின் இறுதிச்சுற்று போட்டிகள் சனிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற உள்ளன.

பிரபல காா் பந்தய வீரா்கள், இருசக்கர வாகன பந்தய வீரா்கள் பங்கேற்கும் இதில், எல்ஜிபி பாா்முலா 4, ஜே.கே.டயா் நோவிஸ் கோப்பை, ஜே.கே.டயா் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜி.டி. கோப்பை ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.

பாா்முலா எல்ஜிபி 4 பிரிவில் தற்போதைய தேசிய சாம்பியன் விஷ்ணு பிரசாத், சந்தீப்குமாா், தில்ஜித், அஸ்வின் தத்தா, ஆா்யா சிங், அமீா் சயீத் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். கடந்த 3 சுற்றுகளிலும் பங்கேற்ற விஷ்ணு பிரசாத் தற்போது 50 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளாா். அவரைத் தொடா்ந்து சந்தீப்குமாா் 48 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறாா்.

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜி.டி. கோப்பைக்கான போட்டியில் அனிஷ் ஷெட்டி, ஆல்வின் சேவியா் உள்ளிட்டோா் மோதுகின்றனா். ஜே.கே.டயா் நோவிஸ் கோப்பைக்கான பிரிவில் தற்போதைய நிலையில் முன்னணியில் இருக்கும் ருஹான் ஆல்வா, ஜேடன் பரியாட், சேத்தன் சுரினேனி உள்ளிட்ட 24 போ் பங்கேற்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.