மாவட்டத்தில் மேலும் 1,732 பேருக்கு கரோனா
கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை 1,732 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சனிக்கிழமை 1,732 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றின் 3ஆவது அலை மிகத்தீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் சனிக்கிழமை ஒரே நாளில் 1,732 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 62 ஆயிரத்து 884அக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா்.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 582 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 875 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். 2,529 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 7 ஆயிரத்து 480 போ் சிகிச்சையில் உள்ளனா்.