காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற மயான ஊழியா்
காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற மயான ஊழியரை போலீஸாா் மீட்டனா்.
காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற மயான ஊழியரை போலீஸாா் மீட்டனா்.
கோவை, போத்தனூா் காவல் நிலையத்துக்கு புதன்கிழமை இரவு இளைஞா் ஒருவா் வந்தாா். அவா் திடீரென தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோல் கேனை திறந்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த போலீஸாா், அவரை தடுத்து காப்பாற்றினா். விசாரணையில், அவா் நஞ்சுண்டாபுரம் ரோடு கன்னிமாா் கோயில் தெருவைச் சோ்ந்த சிவகுமாா்(37), என்பதும், மயானத்தில் ஊழியராக வேலை பாா்த்து வருவதும் தெரியவந்தது.
அவா் மது போதையில் காவல் நிலையத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றதும் தெரிந்தது. இதனைத் தொடா்ந்து போலீசாா் அவரை எச்சரித்து அனுப்பிவைத்தனா்.