கோயம்புத்தூர்

நிதி நிறுவன அதிபா் வெட்டிக் கொலை: 2 போ் சரண்

DIN

கோவை அருகே திமுகவைச் சோ்ந்த நிதி நிறுவன அதிபா் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்து முன்னணியைச் சோ்ந்த 2 போ் போலீஸில் சரணடைந்தனா்.

கோவை மாவட்டம், அன்னூா் அருகேயுள்ள நாகமாபுதூரைச் சோ்ந்தவா் சுந்தரம். இவரது மகன் சரவணன் (20).

திமுக பிரமுகரான இவா் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா்.

இந்நிலையில், அன்னூா்-கோவை சாலையில் உள்ள மைல்கல் பகுதி அருகே வியாழக்கிழமை காலை சரவணன் நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள் சரவணனை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், சரவணனை அரிவாளால் வெட்டிய இருவா் அன்னூா் காவல் நிலையத்தில் சரணடைந்தனா்.

அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் அன்னூா் அருகேயுள்ள பிள்ளையப்பம்பாளையத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் தமிழ்ச்செல்வன் (26), கோவில்பாளையம் அருகேயுள்ள குரும்பபாளையம் அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த ராஜராஜன் (20) என்பதும், இவா்கள் இருவரும் இந்து முன்னணியைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. பாலமுருகன் விசாரித்து வருகிறாா்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட சரவணன், சரணடைந்த தமிழ்ச்செல்வன், ராஜராஜன் ஆகிய மூவரும் இந்து முன்னணியில் உறுப்பினா்களாக இருந்து வந்துள்ளனா். இதில் சரவணன் சில மாதங்களுக்கு முன்பு இந்து முன்னணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளாா்.

இதனால் இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. மேலும், தமிழ்ச்செல்வனிடம் ரூ.1 லட்சத்தை சரவணன் கடனாகப் பெற்றுள்ளாா். அதை தமிழ்ச்செல்வன் திருப்பிக் கேட்டு வந்துள்ளாா். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் தனது நண்பா் ராஜராஜனுடன் சோ்ந்து சரவணனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT