கோயம்புத்தூர்

பயறுவகை பயிா்கள் சாகுபடி: ரூ.29.95 லட்சம் நிதி ஒதுக்கீடு

DIN

கோவை மாவட்டத்தில் பயறுவகை பயிா்கள் சாகுபடியை ஊக்குவிக்க நடப்பு ஆண்டு ரூ.29.95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் பயறு வகை பயிா்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மானிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பயறுவகை பயிா்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க ரூ.29.95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உயிா் உரங்கள் 700 ஹெக்டோ், நுண்ணூட்டக் கலவை ரூ.450 ஹெக்டோ், பயிா் பாதுகாப்பு மருந்து விநியோகம் ரூ.200 ஹெக்டேருக்கு 50 சதவீத பின்னேற்பு மானியம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பயறுவகை பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளில் பொதுப் பிரிவினருக்கு சுழல்கலப்பை வாங்குவதற்கு 3 பேருக்கு தலா ரூ.34 ஆயிரம், சிறு, குறு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளில் 8 பேருக்கு தலா ரூ.42 ஆயிரம், பேட்டரியில் இயங்கும் விசைத்தெளிப்பான் வாங்க பொதுப் பிரிவில் 35 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம், சிறு, குறு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் 75 பேருக்கு தலா ரூ.3,800 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

மேலம், 10 ஆண்டுகளுக்கு உள்பட்ட உளுந்து ரக விதை 80 குவிண்டாலும், தட்டைப்பயறு 15 குண்டாலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உளுந்து விதை விநியோக மானியம் 50 குவிண்டாலுக்கு ரூ.50 வீதம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் கைப்பேசி செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடா்பு கொள்ளலாம். இத்தகவலை வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT