கோயம்புத்தூர்

எஸ்.பி. வேலுமணியின் உதவியாளர் இல்லத்தில் சோதனை

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமார் இல்லத்தில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

DIN


முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமார் இல்லத்தில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவர் எஸ் பி வேலுமணிக்கு நெருக்கமானவர். கடந்த 6-ந்தேதி சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6 இடங்களிலும் சோதனை நடந்தது. சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் லேப் டாப்பை போலீசார் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அவரது நண்பர் சந்திரபிரகாஷ் கோவை பீளமேட்டில் கே.சி.பி. நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு 5-வது நாளாக கே.சி.பி.நிறுவனம், ஆலயம் அறக்கட்டளையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இவரது இல்லத்திலும் 3வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு முதல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்தகுமார் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT