கோயம்புத்தூர்

வால்பாறையில் கனமழை: வெள்ளை மலை சுரங்க நீர்வீழ்ச்சிக்கு செல்லத் தடை

DIN

கோவை: கோவை மாவட்ட வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் இன்று ஒரு நாள் மட்டும் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

கோவை மாவட்ட வால்பாறையில் விடிய விடிய கன மழை பெய்து வருவதால் கருமலை, வெள்ளைமலை சுரங்க நீர்வீழ்ச்சி  போன்ற அனைத்து பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆற்றங்கரை ஓரம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வால்பாறையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான வெள்ளமலை சுரங்க நீர்வீழ்ச்சி, கருமலை போன்ற அனைத்து பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் கரையோர மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மற்றும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வெள்ளைமலை சுரங்க நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தடையை மீறி செல்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறையில் கனமழை காரணமாக, வால்பாறை-பொள்ளாச்சி சாலையின்  குறுக்கே  மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாகவே வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT