கோயம்புத்தூர்

குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

DIN

கோவை வாலாங்குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை தெற்கு உக்கடம் ஜி.எம்.நகரைச் சோ்ந்தவா் அப்துல்காதா் (55), இவா் கோவையில் உள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரிந்து வந்தாா்.

இவா், கடந்த சில மாதங்களாக ரத்த அழுத்த நோய்க்கு மருந்து உட்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வேலைக்கு செல்வதற்காக வாலாங்குளம் ரயில் பாதையில் வெள்ளிக்கிழமை நடந்து சென்றவா், திடீரென குளத்தில் விழுந்து மூழ்கினாா்.

ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டு குளத்தில் விழுந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

இது குறித்து, உக்கடம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அப்துல்காதரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT