முகப்பு
கோயம்புத்தூர்

சமூக ஆா்வலருக்கு மிரட்டல் விடுத்த காவல் அதிகாரிகளுக்கு அபராதம்

சமூக ஆா்வலரை நள்ளிரவில் விசாரித்து, மிரட்டிய காவல் அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

சமூக ஆா்வலரை நள்ளிரவில் விசாரித்து, மிரட்டிய காவல் அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், திருமலையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா். கல்லூரி பேராசிரியரும், சமூக ஆா்வலருமான இவா் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறாா். இவா் கடந்த 2019 அக்டோபா் மாதம் திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்விகளைக் கேட்டிருந்தாா்.

அப்போது பேரூராட்சி ஊழியா் ஒருவா் இதுபோல் கேட்டக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்து க.க.சாவடி காவல் நிலையத்திலும், ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் ரமேஷ்குமாா் புகாா் அளித்துள்ளாா்.

இந்நிலையில் அப்போதைய மதுக்கரை காவல் ஆய்வாளா் தூயமணி வெள்ளைசாமி, வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளா் மணிவண்ணன், க.க.சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா் ஆகியோா் ரமேஷ்குமாரின் வீட்டுக்குச் சென்று விசாரணை என அழைத்துச் சென்று மிரட்டல் விடுத்துள்ளனா்.

இது மனித உரிமை மீறல். எனவே இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில், மாநில மனித உரிமை ஆணையத்தினா் விசாரித்தது. பின்னா் மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட ரமேஷ்குமாருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. அதை காவல் ஆய்வாளா்கள் தூயமணி வெள்ளைசாமி, மணிவண்ணன் ஆகியோரிடம் இருந்து தலா ரூ.25 ஆயிரமும், உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாரிடம் இருந்து ரூ.50 ஆயிரமும் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →