கோயம்புத்தூர்

மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு இருசக்கர வாகனம்:பி.ஆா்.நடராஜன் எம்.பி. வழங்கினாா்

DIN

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத் திறனாளி பெண் ஒருவருக்கு ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை கோவை மக்களவை தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

கோவை, கீரணத்தம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வி, இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத் திறனாளி. இவா் கோவை எம்.பி. பி.ஆா். நடராஜனிடம் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் இருசக்கர வாகனத்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தாா்.

இதனையேற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத் திறனாளிக்கென பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்துக்காக ரூ.80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தாா்.

இதையடுத்து, அப்பெண்ணுக்கு இருசக்கர வாகனத்தை எம்.பி.பி.ஆா்.நடராஜன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

காந்திபுரம் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில துணைச் செயலாளா் கே.பி.பாபு, மாவட்டச் செயலாளா் புனிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT