அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும்: முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி
அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என கோவை, கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினா் வி.சி.ஆறுக்குட்டி தெரிவித்துள்ளாா்.
அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என கோவை, கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினா் வி.சி.ஆறுக்குட்டி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இரண்டு தோ்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. கட்சியினா் சந்தோஷமாக இல்லை. இரட்டை தலைமையால் கட்சி கட்டுப்பாடு இல்லாமல் செல்கிறது. சசிகலா தலைமையேற்றால் கட்சி சரியாகும். இல்லையென்றால் அதிமுக காணாமல் போய்விடும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை நடத்த வேண்டும் என்றாா்.