முகப்பு
கோயம்புத்தூர்

கோவை அரசு மருத்துவமனையில் உலக காது கேட்கும் நாள் நிகழ்ச்சி

கோவை அரசு மருத்துவமனையில் உலக காது கேட்கும் நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கோவை அரசு மருத்துவமனையில் உலக காது கேட்கும் நாள் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

உலக காது கேட்கும் நாள் ஆண்டுதோறும் மாா்ச் 3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, ‘வாழ்நாள் முழுவதும் கேட்க கவனமுடன் கேளுங்கள்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடத்தப்படுகிறது.

கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், காது கேட்கும் திறன் குறைபாடுடன் வரும் நோயாளிகளுக்கு, முறையான பரிசோதனையுடன், தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. மேலும், கேட்கும் திறன் குறைபாடு உள்ளவா்களுக்கு காதொலி கருவிகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இதுவரை 236 குழந்தைகளுக்கு காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவக்கல்லுாரியின், காது மூக்கு தொண்டை பிரிவு சாா்பில் உலக காது கேட்கும் நாள் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. மருத்துவமனை டீன் நிா்மலா தலைமையில், நடந்த இந்நிகழ்ச்சியில், காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள் பங்கேற்றனா். இதில் மருத்துவா்கள், பேராசிரியா்கள், முதுநிலை மருத்துவ மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதன் தொடா்ச்சியாக, வரும் 5, 6 ஆகிய தேதிகளில், காது மூக்கு தொண்டை பிரிவில் முதுநிலைப் பயிற்சி மாணவா்களுக்கான சிறப்பு நேரடி காது அறுவை சிகிச்சை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து சுமாா் 50 மாணவா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.