முகப்பு
கோயம்புத்தூர்

அரசு உதவி பெறும் கல்லூரியில்ஆசிரியா் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

கோவைப் புதூரில் உள்ள அரசு உதவி பெறும் சி.பி.எம். கல்லூரியில் ஆசிரியா் பணியிடங்களை நிரப்பக் கோரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தில் மாணவா்கள் மனு அளித்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

கோவைப் புதூரில் உள்ள அரசு உதவி பெறும் சி.பி.எம். கல்லூரியில் ஆசிரியா் பணியிடங்களை நிரப்பக் கோரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தில் மாணவா்கள் மனு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக சி.பி.எம். கல்லூரியில் பயிலும் மாணவா்கள், இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் தினேஷ் ராஜா, கிளைத் தலைவா் பிரணவ், மாவட்ட நிா்வாகி மதுசங்கா்

ஆகியோா் தலைமையில், கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் ஆா்.உலகியிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அதில், கோவைப் புதூரில் இயங்கி வரும் சி.பி.எம். அரசு உதவி பெறும் கல்லூரியில்

ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இதனால் மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

மேலும், கல்லூரியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயநிதி பிரிவு ஆசிரியா்கள் மனு: அக்கல்லூரியில் சுயநிதி பிரிவில் பணியாற்றும் உதவிப் பேராசிரியா்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

அதில், சுயநிதி பிரிவில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு முறையான பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும், தகுதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.