கோயம்புத்தூர்

சிறுவாணி சாலையில் சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்த குட்டியானை (விடியோ)

கோவை மாவட்டம் சிறுவாணி சாலை சாடிவயல் பகுதியில் உள்ள 5 மலை கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்படும். 

DIN

கோவை: கோவை மாவட்டம் சிறுவாணி சாலை சாடிவயல் பகுதியில் உள்ள 5 மலை கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்படும். 

இந்நிலையில் நேற்று மாலை சாடிவயல் பகுதியிலிருந்து வெள்ளப்பதி நோக்கி அரசுப் பேருந்து சென்ற போது திடீரென வனப்பகுதிக்குள் இருந்துவந்த குட்டியானை ஒன்று பேருந்தை வழிமறித்து பேருந்தை நோக்கி வந்தது. 

இதனால் பேருந்து ஓட்டுநர் பேருந்தை பின்னால் செலுத்தினார். இதனை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் அவரது செல்போனில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த விடியோ வைரலாகி வருகிறது. வழக்கமாக இரவு நேரங்களில் மட்டுமே அங்கு சாலைகளை கடக்கும் யானைகள் கோடைகாலம் என்பதால் தண்ணீர் தேடி வந்திருக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT