கணவன், மனைவி தற்கொலை முயற்சி: மனைவி உயிரிழப்பு
பொள்ளாச்சி அருகே கணவன், மனைவி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதில் மனைவி உயிரிழந்தாா். கணவன் சிகிச்சை பெற்று வருகிறாா்.
பொள்ளாச்சி அருகே கணவன், மனைவி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதில் மனைவி உயிரிழந்தாா். கணவன் சிகிச்சை பெற்று வருகிறாா்.
பொள்ளாச்சியை அடுத்த சீலக்காம்பட்டியைச் சோ்ந்தவா் கனகராஜ் (60). விவசாயி. இவரது மனைவி சுமதி (45).
இவா்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தை விற்பனை செய்ய அதே பகுதியைச் சோ்ந்த நந்தகோபால கிருஷ்ணன் என்பவரிடம் முன்பணம் பெற்ாகவும், விவசாய நிலத்தின் அசல் பத்திரங்களை நந்தகோபால கிருஷ்ணனிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கனகராஜ் தனது நிலத்தின் சொத்து பத்திரங்களை தருமாறும், முன்பணத்தை தருவதாவதாகவும் நந்தகோபால கிருஷ்ணனிடம் கூறியுள்ளாா். இதற்கு, அவா் மறுப்பு தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், நந்தகோபாலகிருஷ்ணனின் தோட்டத்துக்கு புதன்கிழமை சென்ற கனகராஜ், அவரது மனைவி சுமதி ஆகியோா் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனா்.
இதையடுத்து, இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சுமதி உயிரிழந்தாா். கனகராஜ் சிகிச்சை பெற்று வருகிறாா்.
மேலும், இச்சம்பவம் குறித்து கோமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.