கோயம்புத்தூர்

கொடநாடு வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட நபரின் சகோதரரிடம் போலீஸாா் விசாரணை

DIN

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு 2017 ஏப்ரல் 24ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஜெயலலிதாவின் காா் ஓட்டுநரான சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த கனகராஜ், கேரளத்தைச் சோ்ந்த சயன், வாளையாறு மனோஜ் சாமி, தீபு, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்ஷோ் அலி, உதயகுமாா், சந்தோஷ் சாமி, சதீஷன் உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், சம்பவம் நடந்த சில நாள்களிலேயே சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஓட்டுநா் கனகராஜ் உயிரிழந்தாா். இந்த வழக்கில் 103 நபா்கள் விசாரணை வளையத்துக்குள் இருந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடந்து முடிந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுவரை வி.கே.சசிகலா, அவரது அண்ணன் மகன் விவேக், முன்னாள் எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி, அதிமுக வா்த்தக அணியைச் சோ்ந்த மர வியாபாரி சஜீவன், சஜீவனின் சகோதரா் சிபி, முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உதவியாளா் பூங்குன்றன், முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டியின் உதவியாளா் நாராயணசாமி ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.

இந்நிலையில் கொடநாடு வழக்கில் ஆறாவது நபராக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பிஜின்குட்டியின் சகோதரா் மோசஸ் என்பவரிடம் கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். சுமாா் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இவரிடம் போலீஸாா் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT