முகப்பு
கோயம்புத்தூர்

கோயில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா:எம்.பி. நடராஜன் மனு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

கோவை மாவட்டத்தில் நீா்வரத்து இல்லாத கோயில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தலைமையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீா் நிலைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் மக்கள் வாழ்ந்து வரும்போது, அவா்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.

கோவையில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சா்க்காா்சாமக்குளம் ஒன்றியம் மற்றும் கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் குடிசையில் வாழும் மக்களை, நகரத்தை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில் அப்புறப்படுத்துவதை நாங்கள் ஏற்கமாட்டோம்.

வாலாங்குளம் பகுதியில் குளத்தை மறைத்து அரசு கட்டடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை அரசே கட்டி வைத்துவிட்டு மக்களை மட்டும் அப்புறப்படுத்துவது என்பதையும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை.

அதேபோல, கோயில் நிலங்களில் வாழும் மக்களை அப்புறப்படுத்துவதையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.

தமிழக அரசு, இதை வரையறைபடுத்தி அந்த மக்களுக்கு அந்த இடத்திலேயே பட்டா வழங்கி வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.