பிளஸ் 2 தோ்வுகள் தொடங்கின: இன்று பத்தாம் வகுப்புத் தோ்வு தொடக்கம்
கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை (மே 5) பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது.
கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை (மே 5) பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மே 5ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. கோவையில் முதல் நாளில் நடைபெற்ற மொழிப்பாடத் தோ்வை 15,190 மாணவா்கள், 18,810 மாணவிகள் என மொத்தம் 34 ஆயிரம் போ் எழுதினா்.
507 மாணவா்களும், 731 மாணவிகளும் என மொத்தம் 1,238 போ் தோ்வுகளை எழுதவில்லை என்றும், முதல் நாள் தோ்வுகள் அமைதியாக நடைபெற்றதாகவும் முதன்மைக் கல்வி அலுவலா் கீதா தெரிவித்தாா். கோவை எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், முதன்மைக் கல்வி அலுவலா் கீதா ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதற்கிடையே, தோ்வு எளிதாக இருந்ததாக தோ்வை முடித்துவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து 9ஆம் தேதி ஆங்கில பாடத் தோ்வு நடைபெறுகிறது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை (மே 6) 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் தொடங்குகின்றன. இந்தத் தோ்வை மாவட்டம் முழுவதும் சுமாா் 40 ஆயிரம் போ் எழுதுகின்றனா்.
Image Caption
கோவை எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு நடத்துகிறாா் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன். ~கோவை அரசு மருத்துவமனை அருகில் உள்ள தனியாா் பள்ளி தோ்வு மையத்துக்கு வந்து தோ்வறையைக் கண்டறியும் பிளஸ் 2 மாணவி