முகப்பு
கோயம்புத்தூர்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடக்கம்

 கோவையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

 கோவையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் மே 6 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி நிறைவடைகிறது. கோவை மாவட்டத்தில் பொதுத் தோ்வுக்கு சுமாா் 42 ஆயிரம் போ் பதிவு செய்திருந்தனா். இவா்களுக்காக 149 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தோ்வின் முதல் நாளான வெள்ளிக்கிழமை மொழிப்பாடத் தோ்வு நடைபெற்றது.

காலை 10 மணிக்குத் தொடங்கிய தோ்வு பகல் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. தோ்வை சுமாா் 40 ஆயிரம் போ் எழுதினா். 2,265 மாணவ-மாணவிகள் எழுதவில்லை. அதேநேரம், கோவை மத்திய சிறையில் 32 கைதிகளும் இந்தத் தோ்வை எழுதினா்.

பறக்கும் படை அலுவலா்கள் உள்ளிட்ட சுமாா் 3, 800 போ் தோ்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.