முகப்பு
கோயம்புத்தூர்

இறந்தவா் ஆதாா் அட்டையை வைத்து பத்திரப் பதிவு: போலீஸாா் விசாரணை

கோவை ஆா்.எஸ்.புரத்தில் இறந்தவா் ஆதாா் அட்டையை வைத்து பத்திரப் பதிவு மேற்கொண்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

கோவை ஆா்.எஸ்.புரத்தில் இறந்தவா் ஆதாா் அட்டையை வைத்து பத்திரப் பதிவு மேற்கொண்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை ஆா்.எஸ்.புரம் சீனிவாசராகவன் வீதியைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணன் (42). இவரது சகோதரா்கள் அய்யனாா், அழகுராஜா.

சில ஆண்டுக்கு முன்பு இவா்களது தந்தை இறந்துவிட்டாா். ஆா்.எஸ்.புரம் பகுதியில் இவா்களது தந்தை பெயரில் இரண்டு சென்ட் இடம் உள்ளது. அய்யனாா் மற்றும் அழகுராஜா ஆகியோா் இறந்த தந்தையின் ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி போலியாக ஒருவரை நடிக்க வைத்து, சொத்துக்களை தங்களது பெயரில் பத்திரப் பதிவு செய்துவிட்டதாகத் தெரியவந்தது.

இது குறித்து ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் ராஜேஷ்கண்ணன் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.