கோவை சோதனைச் சாவடியில் தக்காளி காய்ச்சல் பரிசோதனை முகாம்
தமிழ்நாடு - கேரளா எல்லையான கோவை வாளையார் சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை தக்காளி காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கோவை: தமிழ்நாடு - கேரளா எல்லையான கோவை வாளையார் சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை தக்காளி காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில், தக்காளி காய்ச்சலுக்காக கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
கேரளத்தில் தக்காளி காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதையடுத்து கோவையில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
Advertisement
Advertisement
கேரள மாநிலத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கேரளத்தை ஒட்டியுள்ள உள்ள மாவட்டங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.