கோயம்புத்தூர்

தோட்டத் தொழிலாளா்கள் நிலுவைத் தொகை வழக்கு 18இல் விசாரணை

DIN

கோவை மாவட்ட தோட்டத் தொழிலாளா்களுக்கு நிலுவைத் தொகை குறித்த வழக்கு விசாரணை, கோவை தமிழ்நாடு ஸ்டேட் ஜூடிசியல் அகாதெமியில் மே 18 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

இது தொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் ஏ.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி, தோட்டத் தொழிலாளா்களுக்கு நிலுவைத்தொகை வழங்கும் பணியை துரிதப்படுத்தும் பொருட்டு அமைக்கப்பட்ட ஒரு நபா் குழுவின் தலைவா் நீதிபதி அபய்மனோகா் சப்ரே முன்னிலையில் கோவை, தமிழ்நாடு ஸ்டேட் ஜூடிசியல் அகாதெமியில் விசாரணை மே 18 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீலகிரி மகாவீா் பிளான்டேஷன்( பி) லிமிடெட், மஞ்சு ஸ்ரீ பிளான்டேஷன் தோட்ட நிறுவனங்கள், வால்பாறை ஹைபாரஸ்ட் எஸ்டேட் தோட்ட நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த, பணிபுரியும் தொழிலாளா்கள் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT