முகப்பு
கோயம்புத்தூர்

தக்காளி வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் கோவையில் 15 குழந்தைகள் அனுமதி

கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் தக்காளி வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் 15 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் தக்காளி வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் 15 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கேரளத்தின் சில மாவட்டங்களில் தக்காளி காய்ச்சல் என புதிய வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் தொண்டை வலி, உடல் முழுவதும் சிவப்புத் தடிப்புகளாக வருவது அறிகுறியாகும். கேரளத்தில் இந்தக் காய்ச்சல் பரவி வருவதால் தமிழக-கேரள எல்லைகளில் சுகாதாரத் துறையினா் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

கேரளத்தில் இருந்து வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்பமானி கொண்டு சோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா். 5 வயதுக்குள் உள்ள குழந்தைகளே இந்த வைரஸால் பெரும்பாலும் பாதிக்கப்படுவதால் அங்கன்வாடி மையங்களிலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்நிலையில் கோவை மாநகா் பகுதிகளில் தக்காளி வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் 12 வயதுக்கு உள்பட்ட சிறுவா்கள் 15 போ் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெறும் குழந்தைகள் நல்ல நிலையில் உள்ளனா். பொதுமக்கள் இதுகுறித்து அச்சமடையத் தேவையில்லை என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.